Comparison of Vending Machine in Model Wise Detail Click Here Downloadnew


colum1 column2 colum1


Comparison of Burning Machine in Model Wise Detail Click Here Downloadnew


column2 column2 column2 colum1


    சிறப்பு அம்சங்கள்




picture1 picture2 picture3 picture4 picture5


    ONLINE - SIMULATION - DEMO

    Simulation - Demonstration - Click Here
    colum1 colum1 colum1


      சானிட்டரி நாப்கின் வெண்டிங்க் மற்றும் சானிட்டரி நாப்கின் பெர்னிங்க் மெஷின் பயன்பாடு - குறிப்பு

    பல பெண்கள் மாத விடாயை கண்ணியக்குறைவான மற்றும் சிலர் விலக்கி வைக்கப்பட வேண்டிய விஷயமாக எண்ணுகிறார்கள். சிலர் தனிமைப்பட்ட உணர்வதோடு அதைப்பற்றி பேசக் கூட சங்கடப்படுகிறார்கள். பலருக்கு மாத விடாயைப் பற்றியும் அதை எதிர்கொள்ள வேண்டிய முறைகள் பற்றியும் தேவையான புரிதல் இல்லை.
    சிலர் தங்கள் தாய்மார்கள் மூலமாகவும் மற்றும் குடும்பத்தில் உள்ள மூத்தோர் மூலமாகவும் அறிவுறுத்தல்களை பெறுகிறார்கள். சிலர் பள்ளிகளிருந்து குறைவான அளவே அறிவுறுத்தல்களை பெறுகின்றனர்
    மாதவிடாயின் போது துணிகளாலன நாப்கின்ஸ்களையும், அதையே துவைத்து திரும்பவும் உபயோகப்படுத்துவதால் இனப்பெருக்க உறுப்பு பாதையில் தொற்று மற்றும் வேறு நோய்கள் ஏற்படவும் வழிவகை செய்கிறது.
    இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் பாதிக்கு மேற்பட்ட பள்ளிகளில் படிக்கும் பெண்கள் பூப்படைந்தவுடன் அவர்களை பெற்றோர்களால் திருமணத்திற்கு உட்படுத்தப்படுகின்றார்கள். ஏனென்றால் அவர்களின் மாதவிடாயை திருமணத்திற்கு தயாராகிவிட்டதற்கான அறிகுறியாயும், வயது வந்து திருமணமாகாமல் இருப்பது அவமானம் மற்றும் ஆபத்து என்றும் கருதுகிறார்கள் என்று தெரியவந்துள்ளது. மற்றொரு ஆய்வு 28 சதவிகிதம் பள்ளியில் படிக்கும் பெண்கள் மாதவிடாயின் போது பள்ளிக்கு செல்வதில்லை என்று தெரிவிக்கிறது.
    எங்கள் தயாரிப்பு நிறுவனமான FARADAY OZONE ம் அதை வியாபார மற்றும் அதன் ரீதியான சேவைகளுக்கு நிறுவனம் -VISAGA TECHNO SYSTEM இரண்டு புதிய பயன்பாட்டு இயந்திரங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். அவைகள்
    1. நபி வெண்ட் - NAPKIN VENDING MACHINE மற்றும்
    2.நபி பெர்ன் - NAPKIN BURNING MACHINE.

    NAPKIN VENDING MACHINE - NAPI VEND : நபி வெண்ட் என்பது சானிட்டரி நாப்கின்ஸ் விற்பனை செய்யும் இயந்திரம். அவசர காலங்களில் சானிட்டரி நாப்கின்ஸ் பெற இதை மிக எளிதாக பயன்படக்கூடடியது . அது சானிட்டரி நாப்கின்ஸ் ஐ தருவதோடு மட்டுமில்லாமல் தேவையில்லாத சங்கடத்திலிருந்து மீண்டு வரவும் உதவுகிறது. இது உபயோகத்திற்கு மிக எளிதானது.
    இதில் நாணயத்தை உள்ளே போடும் பகுதியான குறுகிய துவாரத்தில் ஒரு நாணயத்தை செலுத்துங்கள். உங்களுக்கு தேவையான சானிட்டரி நாப்கின்ஸ்ஐ நாப்கின்ஸை வெளியேற்றும் பகுதியில் இந்த நாப்கின்ஸை பெற்றுக் கொள்ளுங்கள். இந்த இயந்திரம் நிறுவுவதற்கு எளிதானது பெரிதும் உதவியாய் இருக்கும். இது மின்சாரத்தில் இயங்குகிறது. மேலும் கரண்ட் இல்லை என்றாலும் இதில் இருக்கும் பேட்டரியின் சக்தியின் மூலமாக 10 நாட்கள் வரை நீடிக்கும். மேலும் இதை சூரிய சக்தியிலும் இயங்க வைக்கலாம்.
    மேலும் எந்த நாட்டு நாணயமும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தன்மைக்கு இந்த இயந்திரத்தை அளவீடு செய்து கொள்ளலாம். பலதரப்பட்ட நாப்கின்ஸ் தயாரிப்புகளை ( அதிகப்படியான 280 மில்லி மீட்டர் thickness வரை உள்ள நாப்கின்ஸை) இதில் வைத்துக் கொள்ளலாம். இது கல்லூரி, பள்ளிகள், பெண்கள் விடுதி, விற்பனையகங்கள், பொது கழிப்பிடங்கள், காத்திருக்கும் அறைகள் ஆகியவற்றிக்கு பொருத்தமானது.
    NAPKIN BURNING MACHINE நபி பெர்ன் -.

    பொதுவாக பயன்படுத்திய நாப்கின்ஸ்கள் கழிவறைகளில் போடப்படுவதால் அவை சரியாக வெளியே செல்வதில்லை. இது வடிகால்களை அடைத்துக் கொள்வதுண்டு அதை சரி செய்ய நகரங்களில் பல லட்சங்கள் செலவாகும்.
    இதற்கு தீர்வு தான் நபி பெர்ன். மின்சார எரியூட்டுதல் மூலம் இந்த பிரச்சனையை சரிசெய்யலாம். நீங்கள் உபயோகப்படுத்திய நாப்கின்ஸை நாப்கின்ஸ் போடக்கூடிய சிறிய கதவினை திறந்து இந்த பயன்படுத்திய நாப்கின்ஸை உள்ளே போடவேண்டும் பிறகு இந்த கதவினை மூடுவிடுங்கள். சிகப்பு நிற வடிவில் உள்ள ஸ்டார்ட் பட்டனை ஐ ஒருமுறை அமுக்குங்கள் உபயோகப்படுத்திய நாப்கின்ஸ் சில நொடிகளில் எரியூட்டப்படும்.
    இது நிறுவுவதற்கு எளிதானது மற்றும் சுவற்றில் பொருத்தக்கூடியது இது மிக குறைந்த மின்சாரத்தை பயன்படுத்துகிறது. அதாவது ஒரு மணி நேரத்திற்கு 1 கிலோ வாட்க்கு குறைவாக மற்றும் ஒரு நாளைக்கு 200 நாப்கின்ஸ் வரை எரிக்கலாம். ஒவ்வொரு எரியூட்டப்பட்ட நாப்கின்ஸ்ம் 1 மில்லி கிராமிற்கு குறைவான சாம்பலாகும்.
    எரியூட்டப்பட்டவுடன் இதில் உள்ள புகை கட்டுப்படுத்தும் பகுதி ( கார்பன் பில்டர்ஸ்) புகையை உடலுக்கு ஆபத்தில்லாமல் வடிகட்டி வெண்புகையை மட்டும் புகை வெளியேறும் பகுதி வழியாக வெளியேற்றப்படுகிறது. இந்த புகையினால் எந்த வித தீங்கும் ஏற்படாது. இதனை அறிவியல் ஆராய்ச்சியின் மூலம் நிரூபணம் செய்யப்பட்டு மாசுக்கட்டுப் பாட்டு வாரியத்திடன் அதற்கான சான்றிதழ் பெறப்பட்டுள்ளது.
    எங்கள் நிறுவனம் 9001:2001 சான்றிதழ் பெற்றுள்ளது மற்றும் இந்த இயந்திரங்கள் உலகில் பல பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. நாங்கள் விற்பனைக்கு பிறகு தேவையான (சர்வீஸ்) சேவைகளையும் செய்கிறோம். வாழ்க்கைத் தரத்தை இந்தியாவிலும் உலகில் மேம்படுத்த நாங்கள் பல அரசு சாரா நிறுவனங்களுடன் நிலையான தொடர்பு வைத்துக் கொண்டுள்ளோம்.